25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


 பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று 10.08.2026 காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில்,  11.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு அனுமதி இல்லை என பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து  11.08.2026 காட்டுத் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடமிருந்து தகவல் வரப்பெற்றதால் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு நாளை 12.08.2026 தாணிப்பாறை வழியாக மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கி இன்று 11.08.2026 பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று 11.08.2026 இரவு சுமார் 07.00 மணியளவில் காட்டுத் தீ மீண்டும் பரவியுள்ளதாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றது. மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி நாளை 12.08.2026 அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலைமை திரும்பும் வரை நாளை 12.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பிறகு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News